Categories
உலக செய்திகள்

“இரத்தக்கறை படிந்த கையுறைகளை ஏற்றுமதி செய்த நாடு!”.. கொரோனா பரவலை பயன்படுத்தி மிகப்பெரிய மோசடி..!!

கொரோனா சமயத்தில் கையுறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தாய்லாந்து நாட்டில் சில நிறுவனங்கள் அதிக மோசடியை செய்தது தெரியவந்திருக்கிறது.

மியாமியில் வசிக்கும் Tarek Kirschen என்ற தொழிலதிபர், Paddy the Room என்ற தாய்லாந்து நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட கையுறைகளை இறக்குமதி செய்திருக்கிறார். அதனை மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் இவரிடம் கையுறை வாங்கியவர்கள், அவர், ஏற்கனவே பயன்படுத்தியதை சுத்தப்படுத்தி சாயம் ஏற்றி புதுப்பித்து ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்துள்ளனர்.

சிலர் அதில் ரத்தக்கறை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். எனவே அந்த அனைத்து கையுறைகளையும், அவர் திரும்ப வாங்கிக்கொண்டு, அனைத்து நபர்களுக்கும் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். மேலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இந்த சம்பவத்தை பற்றி கூறியிருக்கிறார்.

இதேபோன்று Louis Ziskin என்ற நபரும் 2.7 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட கையுறைகளை வாங்கி, அது போலி என்று தெரிந்தபின் கொடுத்த பணத்தை திரும்ப பெற தாய்லாந்து நாட்டிற்கு நேரடியாக சென்றிருக்கிறார். அப்போது சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இவர் அவர்களை தாக்கியதாக கூறி அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

அதன்பின்பு, தாய்லாந்து காவல்துறையினர் Paddy the Room நிறுவனத்தில் ஆய்வு நடத்தி, அவை போலியான கையுறைகள் என்று கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றிவிட்டார்கள். மேலும், அந்த நிறுவனத்தின் மேலாளரையும் கைது செய்துள்ளனர். எனினும், அந்நிறுவனம் மீண்டும் மற்றொரு  இடத்திற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இதனிடையே, அவ்வாறு வாங்கப்பட்ட கையுறைகள் எந்தெந்த மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தப்பட்டது? என்று தெரியவில்லை. இது மட்டுமல்லாமல் அவை உணவகங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பல விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |