சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்கான்(37). இவர் பர்மா பஜாரில் பழைய செல்ஃபோன் விற்பனை, செல்ஃபோன் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலையில் மீண்டும் வந்து கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், கடையின் உள்ளே சென்று பாத்தபோது 20செல்ஃபோன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் காவல்துறையினர் திருட்டு நடைபெற்ற கடைக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.