100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2000 ஆம் ஆண்டு முதல் கடும் சிரமங்களை சந்தித்து வளர்ந்த தேமுதிகவை விட்டு கயவர்கள் பேச்சை கேட்டு சிலர் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி மோசம் செய்வோரை நம்பி தேமுதிகவை விட்டுச் செல்வது ஒட்டுமொத்த கட்சிக்கும் செய்யும் துரோகம் என்று கூறியுள்ள விஜயகாந்த், ஆசை வார்த்தைக்கு மயங்கியவர்களை பலவீனமானவர்கள் என விமர்சித்துள்ளார்.
தன் உடல் நலனில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான். அதற்காக தேமுதிகவிற்கு எதிர்காலமே இல்லை என நினைப்பது தவறு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கட்சி மீது அவதூறு பரப்புவோரையும், மூளை செலவு செய்வோரையும் நம்ப வேண்டாம் என்று விஜயகாந்த் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்..