Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு வந்த புது சிக்கல் ….. மருத்துவமனையில் முக்கிய வீரர் அனுமதியா ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நேற்றைய போட்டியில் காயம் காரணமாக 2-வது இன்னிங்ஸில் களமிறங்கவில்லை  .

டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் ,பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியாக 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் அணி அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதனிடையே நேற்றைய போட்டியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்து 11 ரன்னில் வெளியேறினார்.

அப்போது ஷாஹீன் அப்ரிடி வீசிய பந்து அவரது தோள்பட்டை  பகுதியில் பட்டதால் பலத்த காயம் அடைந்தார் .இதனால் தோள்பட்டையை பிடித்தவாறே அவர் வெளியேறினார். இதன் பிறகு 2-வது இன்னிங்ஸில் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் பீல்டிங்கில் களமிறங்கினார். இதனால் காயம் அடைந்த அவர்  மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்ய சென்றுள்ளார் என்ற தகவல் வெளியானது .இதனிடையே பவுலிங் செய்யாமல் வரும் பாண்டியா தற்போது பேட்டிங்கிலும் நேற்று நடந்த போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் ,அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |