அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.
Categories