உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுனருக்கு 3 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், மதுரா அருகே பகல்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் என்பவர் ரிஷி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வருமான வரித்துறையிடம் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. இவருக்கு படிப்பறிவு இல்லாத காரணத்தினால் வேறு ஒருவரின் உதவியுடன் அந்த நோட்டீஸில் இருக்கும் விவரங்களை கேட்டுள்ளார். அப்போது அவர் 3 கோடியே 40 லட்சத்து 54 ஆயிரத்து 896 ரூபாய் வரி கட்ட வேண்டும் என்பதை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரதாப் சிங் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரதாப் சிங்கின் வங்கியில் இருந்து பான் கார்டு கேட்டதால் கடந்த மார்ச் மாதம் புதிய பான் கார்டுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். அடுத்த சிலநாட்களில் அவரின் முகவரிக்கு பான் கார்டு நகல் வந்துள்ளது. ஆனால் அவர் அதை நகல் என்று தெரியாமல் இவ்வளவு நாள் வைத்துள்ளார். அவரின் உண்மையான பான் கார்டை பயன்படுத்தி ஒரு மர்ம நபர் ஜிஎஸ்டி பெற்றதுடன், கடந்து 2018 முதல் 19 ஆம் ஆண்டு வரை 43 கோடி அளவில் வணிகம் செய்துள்ளார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.