உணவு பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ கெட்டுபோன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலாவதியான மீன்கள் மற்றும் இறைச்சிகள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஜ்சராஜ் மற்றும் அலுவலர்கள் பெரியகுளம் மற்றும் தென்கரை பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் மீன் மார்கெட்டுகளில் கெட்டுபோன ஆடுகள், கோழி இறைச்சி மற்றும் மீன்களை குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சோதனையில் மொத்தம் 100 கிலோ கெட்டுபோன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மளிகை பொருட்களில் காலாவதியாகும் தேதியை குறிப்பிடாமல் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.