சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சசிகலா குடும்பத்துடன் உறவு வைக்க கூடாது என்று ஓபிஎஸ் கூறி இருந்தார். அவருடைய கூற்றின் படி சசிகலா குடும்பத்துடன் யாரும் உறவு வைத்திருக்கக்கூடாது என்ற கூற்றின் அடிப்படையில் தான் அணிகள் இணைந்தன. சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை ஓபிஎஸ்க்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அம்மாதான் என்னை அமைச்சர் ஆக்கினார். சசிகலா என்னை அமைச்சர் ஆக்கவில்லை. தவறான தகவலைப் பரப்புகிறார்கள் என்று என்று கூறினார். இதனையடுத்து சசிகலாவை எதிர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள். ஆனால் ஒருவேளை சசிகலா கட்சிக்குள் வந்தால் நீங்கள் தான் முதலில் அவருக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்று பேசப்படுகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால் தான் அது நடக்கும்” என்று கூறியுள்ளார்.