ஜெயலலிதாவிற்கு தான் எழுதிக் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வரவில்லை என்றால் வியாபார ரதியாக சசிகலா ஜெயலலிதாவை பயன்படுத்தியது கொண்டதாக அர்த்தம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமி, சசிகலா அம்மையார் அவர்கள் இந்த இயக்கத்தில் பற்றாக இருப்பார் என்று சொன்னால் இந்த அம்மையாரை, ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேற்றிய பின்பு மீண்டும் வீட்டுக்கு அழைத்த போது அவர்கள் என்ன கடிதம் கொடுத்து எழுதினார்கள் என்றால், நானோ அல்லது என்னுடைய குடும்பமோ எந்தச் சூழலிலும் அரசியலுக்கு வர மாட்டோம்.
அக்காவை பாதுகாத்துக் கொள்வதுதான் எங்களுடைய தலையாய கடமை என்று முழு மனதுடன் எழுதிக் கொடுத்த கடிதத்தை மீண்டும் அவர்கள் மனசாட்சியில் நிறைவு கூறுவார்கள் என்று சொன்னால், இந்த இயக்கத்தை நல்ல முறையில் நடத்துங்கள் என்று வாழ்த்துவார் என்று சொன்னால், உண்மையாகவே புரட்சித்தலைவர் அவர்களுடைய உண்மையாக கூர்மையான சகோதரியாக வருவார்கள் அப்படி அவர் வரவில்லை என்று சொன்னால் வியாபார ரீதியாகத் தான் அந்த ஜெயலலிதாவை பயன்படுத்தினார்கள் என்று நான் சொல்ல முடியுமே தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது என்று பேசியுள்ளார்