திருமணம் நடைபெற உள்ள நிலையில் திடீரென வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கோமதியாபுரத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் வெள்ளரிப்பட்டியில் உள்ள ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இரவு நேரம் தனியறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அறைக்குச் சென்ற யுவராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யுவராஜின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.