Categories
சினிமா தமிழ் சினிமா

‘டெடி’ பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த ஆர்யா… ஹீரோயின் இவர்தான்…!!!

ஆர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டிக்டிக்டிக் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். இந்த படம் டெடி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆர்யா, ‘சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் டெடி படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. இது ஒரு புதிய கதை. தமிழ் சினிமாவுக்கு இந்த கதை புதிதாக இருக்கும். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம்’ என தெரிவித்தார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜகமே தந்திரம் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பரத் ராஜ், கோகுல், சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கவியா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆர்யாவும், திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Categories

Tech |