Categories
அரசியல் மாநில செய்திகள்

சாட்டை துரைமுருகனுக்கு நவ-8 வரை சிறை…. அதிரடி உத்தரவு…!!!

சாட்டை திருமுருகன் பல அரசியல் தலைவர்களை பற்றி இழிவாக பேசிய வழக்கில் உள்ளே சென்ற நிலையில் தற்போது ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து தக்கலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி அவதூறு பரப்பினார். இதனால் திமுக தொண்டர்கள் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சாட்டை துரைமுருகனை நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பத்மநாபபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |