கர்வா சௌத் என்பது வட இந்தியாவில் திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் விரதம் ஆகும். இந்த நாளில் பெண்கள் உண்ணாவிரதமிருந்து தங்களின் கணவரின் நீண்ட ஆயுளுக்காக வழிபாடு செய்வார்கள், அண்மைக்காலங்களில் இந்த விழா ஹிந்தி திரைப்படங்களில் தாக்கத்தின் காரணமாக திருமணமாகாத பெண்களும் தங்களின் காதலர்கள் மற்றும் எதிர்கால கணவன் நலனுக்காக கடைபிடிக்க தொடங்கியுள்ளன.
இப்படி இருக்க வடமாநில பெண்களுடன் சேர்ந்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கர்வா சௌத்’ விரதத்தை இன்று கடைபிடித்தார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த நாளை வரவேற்று பேசினார்.