விருதுகளை பெற்ற பின் ரஜினி மற்றும் தனுஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு டெல்லியில் இன்று தேசிய விருதினை அளித்தனர். இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இதில் நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை ‘அசுரன்’ படத்திற்காக பெற்றார்.
மேலும், இந்த விழாவில் ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த விருதை பெற்றுக் கொண்டபின் ரஜினி மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
https://www.instagram.com/p/CVczcQUBrqy/