கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொம்பகுளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த அரசு பள்ளியில் ஷா சீந்தா என்ற மாணவி 10 – ஆம் வகுப்பு பயின்று வருகின்றார்.
இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால் வெற்றி பெற்ற மாணவியை தலைமையாசிரியரான செந்தில்குமரன், உடற்பயிற்சி ஆசிரியரான அசோக் குமார், மற்றும் பல ஆசிரியர்கள் அழைத்து பாராட்டியுள்ளனர்.