மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ – மாணவியர்களை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் இருக்கும் அரசு பள்ளி மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து 3 பிரிவில் மாணவ – மாணவியர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியரான மாரியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரான ரவிசங்கர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான கோவிந்தன் என பலரும் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டியுள்ளனர்.