Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “எதிரிகள் விலகிச்செல்வார்கள்”… மதிப்பு மரியாதை கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்றைய கிரக சூழ்நிலையின் படி பயணங்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உறவினர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க நேரிடும். வரவை விட கொஞ்சம் செலவு தான் கூடும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று வீண் அலைச்சல் வேலைப்பளு போன்றவை இருக்கும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்கள் அடுத்தவர்களைப் பற்றிய  விமர்சனங்கள், கேலிப் பேச்சுகள், கிண்டல் போன்றவற்றை தவிர்த்து விட்டு கல்வியில் கவனத்தை செலுத்துவது நல்லது.

அரசியல் துறையை  சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிரிகள் இன்று விலகிச்செல்வார்கள். அலைச்சலுடன் கூடிய ஆதாயம் இன்று இருக்கும்.அதுபோலவே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதாக இருக்கும். அந்த பயணம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். புதிய முயற்சிகளில் ஓரளவு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.

இன்று சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். எப்பொழுதும் போலவே மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு வையுங்கள். கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து காரியமும் சிறப்பை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |