மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெருமைகள் வந்து சேர இறைவன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாகயிருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினைகள் உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுபகாரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அடுத்தவர் யாரும் குறை கூற கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும்.
இன்று அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். அதுபோல உத்தியோகத்தில் வேலை செய்யக்கூடிய சக நண்பர்களால் உங்களுக்கு அனைத்து விஷயமும் நல்லபடியாக நடக்கும். இன்று உறவினர் வகையிலும் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். அதே போல கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொருத்த வரையில் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
ஆனால் சரியான நேரத்துக்கு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எப்பொழுதுமே கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை கலர் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் காலையில் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வையுங்கள். மிகவும் விசேஷமாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்