Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “மனதில் தைரியம் பிறக்கும்”… கலந்து உரையாடும்போது கவனம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நீங்கள் பணி செய்வீர்கள். சிக்கல்கள் விலகி ஓரளவு சிறப்பை கொடுக்கும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை இருக்கும். இன்று சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு உறங்கச் செல்வது மிகவும் சிறப்பு. பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று எல்லா கஷ்டங்களும் உங்களுக்கு நீங்கும். பொருளாதாரமும் சிறப்பாகவே இருக்கும். மனதில் தைரியம் பிறக்கும்.

மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை மிகவும் பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் கொஞ்சம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள் அது போதும். வீண் பிரச்னைகளும் வாக்குவாதங்களும் இருக்க வேண்டாம்.பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்து உரையாடும்போது வார்த்தைகளை கவனித்து கூர்ந்து பேசுவது மிகவும் நல்லது.

இன்று நீங்கள் பொறுமையை மட்டும் இழந்து விடாதீர்கள் அது போதும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனமும் உங்களுக்கு நிம்மதியாக காணப்படும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் பாடத்தை  படிப்பது நன்மையை கொடுக்கும். இன்று வீட்டை விட்டு வெளியே  செல்லும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |