Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்பாதீங்க…! இது ஓபிஎஸ் போடும் நாடகம்…. புகழேந்தி பொளேர்…!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்களுடைய விருப்பம் என்றும், சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். யார் எந்த பதவியில் இருந்தாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று கூறினார். அண்மையில் “சூரியனை பார்த்து ஏதாவது” என்று சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பேட்டி அமைந்துள்ளது.

மேலும் சசிகலா அதிமுகவில் சேருவதற்காக பச்சைக்கொடி காட்டும் விதமாகவும் இந்த பேட்டி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறியிருந்த கருத்தை அதிமுகவில் இந்த நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சசிகலாவை எடப்பாடி விமர்சித்து இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ஓபிஎஸ் இப்போது அவரை கட்சியில் சேர்ப்பது ஆலோசிக்கப்படும் என்று கூறுகிறார். வருகிற 30-ஆம் தேதி குரு பூஜையில் கலந்துகொள்ள செல்லும்போது முக்குலத்தோர் மக்கள் தங்களை எதிர்ப்பார்கள் என்ற காரணத்தினாலே ஓபிஎஸ் இந்த நாடகத்தை நடத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |