தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாக நலன் கருதி பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. அதன்படி 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி யில் வகுப்பு 3 ஐ சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்க ஆணையிடப்படுகிறது.
* ஆர். திருவளர்செல்வி, துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை – முதன்மை கல்வி அலுவலர் காஞ்சிபுரம்.
* அ. ஞானகௌரி நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் – முதன்மை கல்வி அலுவலர் விருதுநகர்.
* அ. பாலமுத்து, முதன்மை கல்வி அலுவலர், நாமக்கல் – முதன்மை கல்வி அலுவலர் ராமநாதபுரம்.
* எஸ். அருள்செல்வம், முதன்மை கல்வி அலுவலர் காஞ்சிபுரம் – முதன்மை கல்வி அலுவலர் திருவண்ணாமலை
* ஆ. அனிதா, முதன்மை கல்வி அலுவலர், ராணிப்பேட்டை – துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை
* பி. மகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர், விருதுநகர் – முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல்
* எம்.கே.சி. சுபாஷினி, முதன்மை கல்வி அலுவலர், ராமநாதபுரம் – முதன்மை கல்வி அலுவலர், திருநெல்வேலி
* ஆர். பூபதி, முதன்மை கல்வி அலுவலர், திருவண்ணாமலை – முதன்மை கல்வி அலுவலர் கடலூர்
* சி. முத்துகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலர், திருநெல்வேலி – நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மகாராஜா நூலகம் மற்றும் ஆய்வு மையம்
* ப. உஷா, துணை இயக்குனர் (சட்டம்) தொடக்கப்பள்ளி கல்வி இயக்ககம், சென்னை – முதன்மை கல்வி அலுவலர், ராணிப்பேட்டை