சென்னையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன்படி தாம்பரம், அம்பத்தூர், சேத்துப்பட்டு, வியாசர்பாடி மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 4 மணியளவில் பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மின்வினியோகம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் காலனிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.