தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏழை எளிய மக்களும் ரேஷன் பொருட்களை பெற்று பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
அந்த மூன்று நாட்களும் காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி சிறப்பு அத்தியாவசியப் பொருள்கள் நவம்பர் மாதத்திற்கான அதிகபட்சமாக முன் நகர் கிளை முழுமையாக முடிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய கேட்டுக் கொல்லப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.