Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள்…. அரசு உறுதி….!!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசு இலவசமாக வழங்கும் கோமாரி நோய் தடுப்பு மருந்துகள், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்கு போடப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோமாரி நோய் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு முகாம்கள் நடத்துவது இடைவெளி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் கையிருப்பில் உள்ள தடுப்பு மருந்துகளை வைத்து நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தடுப்பூசி பணி நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் ஒரு சில மாவட்டங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.விரைவில் மத்திய அரசு மூலம் போதிய அளவு தடுப்பு மருந்து பெறப்பட்டு தமிழ்நாடு முழுவதும் கோமாரி நோய் தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |