Categories
Uncategorized தேசிய செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மிதந்த 3 மாத குழந்தை… “யூடியூப் பார்த்து தாய் செய்த கொடூர காரியம்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம் கச்ரோத் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்வாதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் பதறியடித்த உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல்துறையினர் வீட்டில் வந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்த நிலையில் மிதந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சுவாதி மற்றும் அவரது கணவரிடம் விசாரணை செய்தபோது பல அதிர்ச்சி தகவல் வெளியானது. பிறந்த மூன்று மாதம் ஆன குழந்தையை சுவாதி கொலை செய்ய முடிவெடுத்து எப்படி கொலை செய்வது என்று செல்போனில் பல வீடியோக்களை பார்த்துள்ளார். பின்னர் வீடியோவில் உள்ளது போலவே குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் சுவாதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |