தமிழகத்தில் பெற்றோர்கள் அரசுப் பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளி என்பதே பெருமையின் அடையாளம் என்று மாற்றிக் காட்ட உழைத்து வருகிறோம். பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கு தனியாரின் பங்களிப்பு மிகவும் அவசியம். அரசு பள்ளி தானே என்று தவறாக எண்ணிவிடக் கூடாது. அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Categories