தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 120க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பங்கேற்பது குறித்து கூடிய விரைவில் விஜய் அறிவிக்க உள்ளார். வாக்களித்தவர்கள் கேட்டால் சின்ன விஷயம் என்றாலும் செய்து கொடுக்க விஜய் உத்தரவிட்டுள்ளார்”என்று அவர் கூறியுள்ளார்.இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.