பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் போலீசாரால் மீட்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் வீடு ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அப்பொழுது அங்கு மூன்று குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்டு தனிமையில் வாழ்ந்து வருவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த வீட்டில் மூத்த பெண் குழந்தை தன் தம்பி மற்றும் தங்கையை அக்கறையுடன் கவனித்து வந்துள்ளாள்.
குறிப்பாக அவர்களின் பெற்றோர் நெடு நாள்களுக்கு முன்பாகவே மூன்று குழந்தைகளையும் கைவிட்டு விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வீட்டில் ஒரு பிள்ளை இறந்து அதன் உடல் அழுகி எலும்புக்கூடாக இருப்பதை கண்டு போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மற்ற இரு பிள்ளைகளும் மோசமான நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு அரசின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதிலும் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் யார், எங்கு சென்றனர், எதற்காக பிள்ளைகளை விட்டுப்போனார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இந்த சம்பவமானது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.