தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.மக்களின் தேவைகளை முன்னரே கண்டறிந்து அதனை பூர்த்தி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்துள்ளது.
அதன்படி நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை 3 நாட்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும். இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்றொரு மகிழ்ச்சி அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது கணவர் தரப்பில் இருந்து போதிய ஆவணங்கள் தரவில்லை என்றாலும் எளிய முறையில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.