Categories
உலக செய்திகள்

தொடர்ந்து மூன்றாவது முறையாக…. கனடா தேர்தலில் வெற்றி…. ட்விட்டரில் பதிவிட்ட இலங்கை தமிழர்….!!

லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழர் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

கனடாவில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட Gary Anandasangaree என்னும் இலங்கை தமிழர் Scarborough—Rouge Park தொகுதியில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். இவர் 16051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் நேற்று நாடாளுமன்ற உறுப்பினராக  பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

Image

 

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ” மூன்றாவது முறையாக  வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதில் நான் மிகவும் பெருமைக் கொள்கிறேன். இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சேவை செய்து அயராது உழைப்பேன். அதிலும் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளை காப்பதில் கனடா அரசு தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் என்பதை உறுதி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |