Categories
தேசிய செய்திகள்

சோகம்.! டெல்லி அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து…. 4 பேர் உடல் கருகி பரிதாப பலி..!!

டெல்லியிலுள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட  தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீடு அமைந்துள்ளது.. அந்த வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டின் மூன்றாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் தீயில் சிக்கிபரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து எப்படி நடைபெற்றது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |