Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அபிஷேக்…. முதலில் போட்ட பதிவு…. என்னனு பாருங்க….!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அபிஷேக் பகிர்ந்த பதிவு வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து, இரண்டாவது நபராக அபிஷேக் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபின் அபிஷேக் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”என்னுடைய வாழ்நாள் அனுபவங்களை இந்த நிகழ்ச்சியில் நான் பயணமாக வைத்தேன். மேலும், நான் நானாக இருந்தேன் என்ற மனநிறைவுடனே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CVdi6KKv7Ro/

Categories

Tech |