Categories
அரசியல் மாநில செய்திகள்

அச்சுறுத்தும் அண்ணாத்தா… உதயநிதி… ஜெயக்குமார் கோபம்…!!

திரைத்துறையில் திமுகவின் ஆதிக்கம் காலம்காலமாகவே தொடர்கின்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் அண்ணாத்த திரைப்படத்தை திரையிட வேண்டும் என திமுக அரசு அழுத்தம் கொடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவர்களைப் பொறுத்தவரையில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலமாக திமுக ஆட்சி வரும் போதெல்லாம்  தாக்குதல்  திரைப்பட துறை மேலே இருக்கும். அவர்கள் நினைத்தால் திரையிடலாம்,

நினைத்தால் திரையிடக்கூடாது. தியேட்டரில் நீ படம் எடுத்தியா, இந்த விலைக்கு தான் நீ எனக்கு கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உன் படம் திரைக்கு வராது, இந்த படம் ஓடாது அப்படி எல்லாம் நிர்ணயம் பண்ணாங்க, அப்படி எல்லாம் கொதித்துப் போயிருந்தது திரைப்படத்துறை.இன்றைக்கு அவர்களை மாத்தவே முடியாது.

அடிப்படையிலேயே ஒரு பெரிய அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி தமிழ்நாட்டை கூறுபோட்டு, முழுமையான அளவிற்கு தங்களுடைய சொந்த பந்தங்கள் தான் அதில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அந்த காலத்தில் செயல்பட்டது. அதே மாதிரிதான் இப்போவும் வந்து செயல்படுவார்கள். இது புது விஷயம் ஒன்றும் கிடையாது. எல்லாமே அவர்கள் செய்தது தான், இப்போதும் செய்ய போகிறார்கள். திரைப்படத் துறையை இவர்களின் ஆதிக்கத்தை அனுபவிக்கும்.

பாச தலைவருக்கு பாராட்டு விழாவில் அஜித் மேடையில் ஏறி சொன்னார்களே… என்னை வலுக்கட்டாயமாக கூட்டிட்டு வந்து உங்களை பாராட்ட வைக்கிறார்கள் என்று வெளிப்படையாக சொன்னார். வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்து பாராட்ட சொல்லுறாங்க. அப்படிப்பட்ட நிலைமை எல்லாம் திரைப்பட கலைஞர்களுக்கு இருந்தது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Categories

Tech |