சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது கோபுரத்தை மறக்கக் கூடிய வகையில் இரும்பு மேற்கூரை உள்ளது. அதனை அகற்றினால் கோபுர தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதுமட்டுமில்லாமல் 165 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த ஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில் வடபழனி ஆண்டவர் கோவில் அருகில் உள்ளது. ஆனால் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பால் கோவில் இருப்பது தெரியவில்லை. இவை இரண்டிற்கும் தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு கோவில் கோபுரம் தெரியக் கூடிய வகையில் மேற்கூரையை நீக்குவதற்கும் மற்றும் பெருமாள் கோவிலை மறைத்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அகற்றப்பட்ட கடைகள் பூக்கடைகள் என்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அருகில் உள்ள காலியிடங்களில் கடைகளைக் கட்டி பூ வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு இரண்டு வாரங்களுக்கு மேல் சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது கும்பாபிஷேகத்திற்காக கோபுரத்தில் வண்ணம் பூசும் வேலை நடந்து கொண்டிருப்பதால் பச்சை திரை போடப்பட்டுள்ளது. இந்த வேலை முடிந்ததும் பச்சை திரை அகற்றப்பட்டதற்குப்பின் சுற்றி எங்கிருந்து பார்த்தாலும் கோபுரத்தின் அழகு பக்தர்களை ஈர்க்கும்.
அதுமட்டுமில்லாமல் பெருமாள் கோவில்கள் பளிச்சிட செய்யப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில் அமைச்சர் நேற்று வடபழனி ஆண்டவர் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பக்தர்கள் கோபுர தரிசனத்திற்கு வழிவகுத்த தற்காகவும் மற்றும் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலை பளிச்சிட செய்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.