டெல்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டெல்லியில் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று எதிரே வந்த டெம்போ மீது மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றிய காவல்துறையினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.