தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனைக் கருதி அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது நல்ல திறமையும், தகுதியும் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்கள் அரசு வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பது. மேலும் இந்த மையத்தில் அரசு வேலை தொடர்பான புத்தகங்கள் அனைத்தும் உள்ளன. அதனை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எடுத்து படித்து கொள்ளலாம். இந்த அமைப்பு மூலம் வங்கி தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் அனைத்தும் அரசு தேர்வு அறிவிப்பு வருவதற்கு ஒரு மாதம் முன்னதாக தொடங்கப்படும்.
தற்போது பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்த பணியிட தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தில் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்துடன் நாளை காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு நேரில் சென்ற வகுப்பில் கலந்து கொள்ளலாம். மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.