மத்திய பிரதேச அமைச்சரின் எதிர்ப்பு கரணமாக்க டாபர் நிறுவனம் அந்த விளம்பரத்தை நிக்கியுள்ளது ..
மத்திய பிரதேசத்தின் கர்வா சவுத் பண்டிகையின்போது டாபர் நிறுவனம் லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்வது போன்று விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரத்தை அனுமதிக்க முடியாது என்று மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சரான நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.
மேலும் இவர் டாபரின் விளம்பரமானது மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் விளம்பரத்தை நீக்கியதோடு மட்டும் இல்லாமல் மன்னிப்பு கேட்பதாகவும் டாபர் நிறுவனம் அறிவித்துள்ளது.