Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங்… “சூடு பிடிக்காத வியாபாரம்”… நேரில் வந்து வாங்குங்க… வியாபாரிகள் வேதனை!!

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் ஆயத்த ஆடை உற்பத்தி அதிகம். மணப்பாறையில் உற்பத்தியாகும் இருபாலருக்கான அனைத்து விதமான ஆடைகளும் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், தீபாவளி பண்டிகையை தங்களுக்கான விடியலாக நம்பி இருக்கின்றனர்.

ஆனால் பண்டிகை நெருங்கி வரும் நேரத்திலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. ஆன்லைன் விற்பனை மோகம் அதிகரித்ததே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட காரணம் என்று, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புத்தாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் குடிசைத் தொழிலாக இளைஞர்கள் பலரும் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வியாபாரம் இல்லாததால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தக மோகத்தை தவிர்த்து உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை உற்பத்தி யாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கடைகளுக்கு நேரில் வந்து தரமான ஆயத்த ஆடைகளை வாங்க முன்வர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.

Categories

Tech |