Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “வாயை தேடி வாய்ப்பு வரும்”கல்யாண பேச்சுகள் கைகூடும் ..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வருமானம் திருப்தி தரக்கூடிய அளவில் இருக்கும். வாய்ப்புகள் வாயில தேடி வந்து சேரும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். உத்யோக அனுகூலம் ஏற்படும். கல்யாண பேச்சுகள் கைகூடும். அதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேலதிகாரியுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். நன்மையும் உண்டாகும். அதேபோல் பணிபுரியும் இடத்தில் இயந்திரங்கள் ஆயுதங்கள் நெருப்பு ஆகியவற்றை கையாளும் பொழுது தொழிலாளர்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

இன்று உங்களை தான தர்ம காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அதுமட்டுமில்லாமல் மாலை நேரத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழலும் இன்று இருக்கும். அதனால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் இன்று பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். பிள்ளைகளுக்கு நீங்கள் முக்கியமான பொருளை வாங்கிக் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். இன்று ஆதாயம் சிறப்பாக இருக்கும். முடிந்தால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் செய்வதால் நல்ல யோகமான சூழலும் இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் தானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |