Categories
மாநில செய்திகள்

தொழிலாளர்களுக்கு தீபாவளி இனிப்பு…. ஆவினில் கொள்முதல் பண்ணுங்க…. கடிதம் எழுதிய தலைமை செயலர்….!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் இனிப்பு பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அனைத்துத்துறை செயலர்களுக்கும் தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ஆவின் நிறுவனத்தில் தினமும் 41,00,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து அதில் 27,00,000 லிட்டர் பாக்கெட் பால் ஆக விற்கப்படுகிறது. அதில் மீதமுள்ள பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உப பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டுதோறும் தீபாவளிக்காக சிறப்பு இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தீபாவளிக்கு கடந்த 11 ஆம் தேதி முதல் இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் காஜுகத்லி, நட்டி மில்க் கேக், மோத்தி பாக், காஜூ பிஸ்தா ரோல் மற்றும் காபி பிளேவர்டு மில்க் பர்பி ஆகிய 5 வகையான இனிப்பு வகைகளும் ரூ.425 விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்பு வகைகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யில் தயாரிக்கப்பட்டது.

இதையடுத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக உதவக்கூடிய வகையில் தங்கள் துறை சார்ந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்குவதாக இருந்தால் ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் தங்கள் துறை சார்ந்த அலுவலக கூட்டங்களின் கூட இனிப்பு வழங்குவதாக இருந்தால் இனி ஆவின் இனிப்பு வகையை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |