சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரின் மனைவியான சுஜாதா என்பவர் தச்சநல்லூர் சந்தி மரித்தம்மன் கோவில் அருகில் பூ கடை வைத்து நடத்தி வருகிறார்.
அங்கு சுஜாதா சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் சுஜாதாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.