தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை முன்னதாகவே கண்டறிந்து அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கூட்டுறவு சங்க பணியாளர்களை போலவே ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுனருக்கு கடன், முன் பணம் தர அனுமதி அளித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருமண முன்பணம் மற்றும் கல்வி, வாகனம், வீடு கட்டுதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் நிதி நிலைக்கு ஏற்ப கடனுதவி வழங்கி பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.