பிரியங்கா மோகன் ரஜினிகாந்த் அவர்களை தான் பிடிக்கும் என கூறியுள்ளார்.
நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் ”டாக்டர்”படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதனையடுத்து, இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ”டான்” படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தியாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்ட பொழுது, அதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன், எனக்கு ரஜினிகாந்த் அவர்கள் மட்டும்தான் பிடிக்கும் என பதிலளித்துள்ளார். மேலும், அவரின் நடிப்பும், ஸ்டைலும் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.