90ஸ் கிட்ஸ் என்பதால் பேசி விட்டு சும்மா போக மாட்டேன் யார் என்று காட்டுகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். இன்றைக்கு ஒரு 90ஸ் கிட்ஸ் ஆக வந்து சும்மா பேசிட்டு போக மாட்டேன். 90ஸ் கிட்ஸ் என்றால் யார் ? இவர் இளைஞராக என்ன செய்ய முடியும் என்பதை சொல்றேன். கேப்டனையும், கட்சியையும் கைவிட்டு விடக் கூடாது. யாராக இருந்தாலும் சரி நம் கட்சியில் கருப்பு ஆடு இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் யாரு நம் மூளையை சலவை செய்தாலும் இந்த கட்சி கேப்டனுக்காக தான் அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
அவர் பையன் மட்டுமல்ல ஒவ்வொரு தொண்டர்களின் கடமை அது தான். எல்லாரும் எம்.எல்.ஏ ஆகணும், மந்திரி ஆகணும், நகர செயலாளராக ஆக வேண்டும் என்பதற்காக அல்ல என் தலைவன் முதல்வர் ஆக வேண்டும். அதற்காக தான் நாம் வந்திருக்கிறோம் அதுக்காக தான் வந்திருக்கிறோம் .னிப்பட்டவர் எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்றால் நீங்கள் ஆரம்பத்திலேயே திமுக, அதிமுக கிட்ட பணம் வாங்கிகொண்டு போகவேண்டியது தானே என விஜய் பிரபாகரன் அதிரடியாக பேசியுள்ளார்.