Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு….! வசமாக சிக்கிய பி.ஏ… ஷாக் ஆன எடப்பாடி …!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் உட்பட 2 பேர் மீது சேலத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுபட்டியை சேர்ந்தவர் மணி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளராக உள்ளார். இவர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஓமலூர் செம்மாண்டப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பலரிடம் பணம் வசூலித்து மணியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதன்படி போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் பணி பெற்றுத் தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்ட செல்வகுமார் 4 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி தொகையை தராமல் ஏமாற்றி விட்டதாக நெய்வேலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் எஸ்பி. ஸ்ரீ அபினவிடம் புகார் அளித்தார். இதுபற்றி விசாரிக்க சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி மற்றும் செல்வகுமார் ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே தனது நண்பரான மணி மீது செல்வகுமாரும் தனி ஒரு புகார் அளித்திருந்தார். அதில் வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உணவுத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் 32 பேருக்கு வேலை வாங்கி தருவதாக ஒரு கோடியே 37 லட்சம் ரூபாயை மணி பெற்றதாக கூறி இருந்தார். அதில் 60 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்தவர் மீத தொகையை தராமல் ஏமாற்றியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுருந்தார். இதுபற்றி விசாரித்து வரும் போலீசார் மணியையும் அவருக்கு பணம் வசூலித்து கொடுத்த செல்வகுமாரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |