புரட்சித் தாய் சின்னம்மாவின் காலில் விழுந்து அழைத்ததை மறந்து விட்டு ஜெயக்குமார் பேசுவதாக அஇஅதிமுக முன்னாள் நிர்வாகி திரு புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு முரணாக பேசுவதற்கு கேபி.முனுசாமி க்கு எந்த அருகதையும் இல்லை என்றும் அவர் அப்போது தெரிவித்துள்ளார். அன்று எல்லோரும் வாக்களித்துதான் பொதுச்செயலாளராக விகே. சசிகலாவை தேர்ந்தெடுத்தோம்.
காலில் விழுந்து அழைத்தோம். அதை மறந்து விட்டு மறுபடியும் அதே கதையை பேசுகிறார். இன்னொருவர் இறந்து விடுவதாக கூறுகிறார். அவர் யார் என்றால்? கேபி. முனுசாமி இறந்து போகாமலேயே ஒரு ராஜ்யசபாவுக்கு இன்னொரு முறை தேர்தல் நடந்தது. அங்கு வேட்பாளர் இறந்து போகவில்லை. ராஜினாமா கொடுத்ததால் தேர்தல் நடந்தது.
இப்போது இறந்து விடுவதாக கூறுகிறார். இன்னொரு முறை அவ்வாறு நடந்தால் வேப்பரம் பள்ளி சட்டமன்ற தொகுதி மக்கள் தாங்க மாட்டார்கள் அதனால் இன்னும் நடக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும். அதனால் ஓபிஎஸ் _ஆல் வளர்ந்த கேபி. முனுசாமி அவர்கள் இப்போது அவரை எதிர்த்துப் பேசுவது நியாயம் அற்ற செயல் இந்த செயலைப் பற்றி பேச வேண்டாம். சமூகத்தைப் பற்றி பேசுவதற்கு கேபி. முனுசாமிக்கு எந்த யோக்கியதையும் அருகதையும் இல்லை.