Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்கள்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

2 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரைசுத்துபுதூர் பகுதியில் ஐசக் தனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலா வசந்தகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரும் மன்னார்புரம் பகுதியில் வசிக்கும் ஆசிரியையான பெப்பின் என்பவரும் கடந்த 13-ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து அவர்கள் இருவரும் உவரி, திசையன்விளை காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள துப்பாஸ்பட்டி பகுதியில் வசிக்கும் மரகத வேல் என்பவரின் மகனான சண்முகவேல் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து கரைசுற்றுப்புதூர் பகுதியில் பறித்து சென்ற 13 பவுன் நகை மற்றும் மன்னார் புரத்தில் பறித்து சென்ற 3 பவுன் நகையை ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது நண்பர்களான வல்லநாடு சக்திவேல், முத்துக்குமார் ஆகியோர் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு சாத்தான்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |