கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய பிறகு படிப்படியாக வேலைவாய்ப்புகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஒரு லட்சம் ப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியாண்டில் ஐடி நிறுவனங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தியது.
அதனால் பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைத்தது. இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 35 ஆயிரம் பிரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போக மற்ற ஐடி நிறுவனங்களும் வேலை வாய்ப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் எச்சிஎல் நிறுவனம் 30 ஆயிரம் பிரஷர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதனைப் போலவே இன்போசிஸ் நிறுவன மும் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது வேலை வாய்ப்பை இழந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.