Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பொது செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அதில் அவர் தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் பணியாளர்களுக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நெல்லை மாநகர பகுதியில் பணிபுரியும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |