சிவகங்கை மாவட்டத்தில் நாளை மட்டும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை மருது சகோதரர்கள் குருபூஜை, முப்பதாம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories